 இலங்கை உள்ளிட்ட நாடுகளின் கடன்கள் தொடர்பில் ஆராய, சீனா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் ஏழு நாடுகளின் குழுவின் அதிகாரிகள் இன்று புதிய இறையாண்மைக் கடன் வட்ட மேசையின் முதல் மெய்நிகர் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. Read more
இலங்கை உள்ளிட்ட நாடுகளின் கடன்கள் தொடர்பில் ஆராய, சீனா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் ஏழு நாடுகளின் குழுவின் அதிகாரிகள் இன்று புதிய இறையாண்மைக் கடன் வட்ட மேசையின் முதல் மெய்நிகர் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. Read more
 
		     இன்றையதினம் தமிழ்நாடு இந்து மக்கள் கட்சியினுடைய தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்கள் உள்ளிட்ட குழுவினர் மரியாதையின் நிமித்தம் இன்றுமுற்பகல் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள செயலதிபர் உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்திற்கும் உமாமகேஸ்வரன் நூல்நிலையத்திற்கும் விஜயம் செய்திருந்தனர். இதன்போது அவர்கள் புளொட் நினைவில்லப் பிரிவு பொறுப்பாளர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.
இன்றையதினம் தமிழ்நாடு இந்து மக்கள் கட்சியினுடைய தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்கள் உள்ளிட்ட குழுவினர் மரியாதையின் நிமித்தம் இன்றுமுற்பகல் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள செயலதிபர் உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்திற்கும் உமாமகேஸ்வரன் நூல்நிலையத்திற்கும் விஜயம் செய்திருந்தனர். இதன்போது அவர்கள் புளொட் நினைவில்லப் பிரிவு பொறுப்பாளர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.  நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்குவதில் பாரிய சிக்கல் காணப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டபோது அவர்கள் இதனை  கூறியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்குவதில் பாரிய சிக்கல் காணப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டபோது அவர்கள் இதனை  கூறியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.  உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரச அச்சகம் இணங்கியமைக்கு அமைய, உரிய தினத்தில் தபால் மூல வாக்குச்சீட்டுகளை அச்சிட்டு வழங்காமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரச அச்சகம் இணங்கியமைக்கு அமைய, உரிய தினத்தில் தபால் மூல வாக்குச்சீட்டுகளை அச்சிட்டு வழங்காமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.  முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரை தலா ஒரு மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டார். அமெரிக்காவில் வசிக்கும் இமாட் சுஹேர் என்பவருக்கு 2014 ஆம் ஆண்டு சட்டபூர்வமான ஆவணம் இன்றி மத்திய வங்கிக்கு சொந்தமான 6.5 மில்லியன் டொலர்களை வழங்கியமை தொடர்பில் தீனியாகல பாலித்த தேரர் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரை தலா ஒரு மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டார். அமெரிக்காவில் வசிக்கும் இமாட் சுஹேர் என்பவருக்கு 2014 ஆம் ஆண்டு சட்டபூர்வமான ஆவணம் இன்றி மத்திய வங்கிக்கு சொந்தமான 6.5 மில்லியன் டொலர்களை வழங்கியமை தொடர்பில் தீனியாகல பாலித்த தேரர் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.