மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன்(முகுந்தன்) அவர்களின் 78ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, வவுனியா, கோயில்குளம், உமாமகேஸ்வரன் நினைவில்ல வளாகத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வரன் பொது நூல்நிலையத்தினை பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு இன்று (18.02.2023) காலை 10.30மணியளவில் இடம்பெற்றது. இந் நூலகம், கடந்த 1992 ம் ஆண்டு, செயலதிபரின் 03ம் ஆண்டு நினைவு நாளன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட போதிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் காணப்பட்ட அசாதாரண நிலைமைகள் காரணமாக தொடர்ச்சியாக இயங்க முடியாத நிலையில் இருந்தது. Read more
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது. சிவில் அமைப்புகளுடன் இணைந்து இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என PAFFREL அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி தேர்தல் நடைபெறுவதில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாகவும், இதுவரை தேர்தலுக்கான நிதி வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் அனைத்து முயற்சிகளும் தோற்கடிக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சீர்குலைக்க அரச அதிகாரிகள் அண்மைக்காலமாக மேற்கொண்ட முயற்சிகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அனைத்து தேர்தல்களும் மிகவும் முக்கியமானவை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்துயுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் நடத்த முடியாத நிலையில் உள்ளூராட்சி நிறுவனங்களின் கட்டுப்பாடு விசேட ஆணையாளர்களின் கீழ் மாற்றப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஓராண்டு ஒத்திவைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் 19ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில், அதற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.
சீனாவின் ஆதரவு இல்லாமலும் இலங்கைக்கான கடனுதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆலோசித்து வருவதாக Bloomberg இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது. இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு சீனாவின் ஆதரவு இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில், சர்வதேச நாணய நிதியம் இந்த விடயம் தொடர்பாக பரீசிலித்து வருகிறது. சீனா இலங்கை பெற்றுக்கொண்ட கடனை மறுசீரமைப்பது தொடர்பிலான உறுதிப்பாட்டை வழங்குவதை பிற்போட்டுள்ள நிலையிலேயே இந்த தகவல் வௌியாகியுள்ளது.
இலங்கையில் இறக்குமதித் தடை தொடரும் பட்சத்தில் நாட்டில் செயற்படும் ஜேர்மன் நிறுவனங்கள் நாட்டிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை பல பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்துள்ள போதிலும், தடையை தளர்த்துமாறு ஜேர்மனி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.