 கொழும்பில் தேசிய மக்கள் சக்தி இன்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு காவல்துறை நடத்திய நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்தில் காயமடைந்த 20 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்சமயம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்ளூராட்சி தேர்தலை பிற்போட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உடனடியாக தேர்தலை நடத்துமாறு கோரியும் தேசிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்தது. Read more

		     கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவின் பெங்களூருவில் சந்தித்த ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள், இலங்கையின் கடன் நிலைமைக்கு விரைவான தீர்வை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுடனான கூட்டத்தின் தலைமைச் சுருக்கத்தை வெளியிட்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் கடன் பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கான தேவையை ஜி20 நாடுகள் அங்கீகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.