நீண்டகாலமாக, புளொட் அமைப்பின் தலைமை பற்றியும் ஏனைய கழக உறுப்பினர்கள் பற்றியும் முகப்புத்தக தளத்தில் பொய்யான, கேவலமான பதிவுகளை வெளிப்படுத்தி வரும் ‘ரகு பரன்’ எனும் பெயரிலான பக்கத்தின் நிர்வாகிக்கும் புளொட் அமைப்புக்கும் எதுவிதமான சம்பந்தமும் கிடையாது என்பதை அறியத் தருகிறோம்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த திகதி குறிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. வாக்குச்சீட்டு அச்சிடல் உள்ளிட்ட சில சிக்கல்கள் காரணமாக திட்டமிட்டபடி மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாமல் போனதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொழும்பு பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.
வவுனியாவில் வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. வவுனியா குட்ஷெட் வீதியின் உள்ளக வீதியிலேயே குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன 09 மற்றும் 03 வயதான சிறுமிகள் இருவர், அவர்களின் பெற்றோர் ஆகியோரது சடலங்களே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் நண்பர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.