தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) இன் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின், சமூக மேம்பாட்டு பிரிவால், 19.03.2023 ஞாயிற்றுக்கிழமையன்று திருகோணமலை, பாலையூற்று, முருகன்கோவிலடி பகுதியில் வாழும், வறுமைக்கோட்டிற்கு கீழ்பட்ட குடும்பங்களைச் சார்ந்த சிறார்களின் கற்றல் நடவடிக்கையை மேம்படுத்தும் முகமாக கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கையை கண்டித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். ஒரு சிலர் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்துள்ளனர்.
இலங்கைக்கு நீடித்த நிதி வசதியின் கீழ் கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) நிறைவேற்றுக் குழு அனுமதி வழங்கியுள்ளது. குறித்த அனுமதியினூடாக 07 பில்லியன் அமெரிக்க டொலர் வரை கடன் பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
விமான பயணச்சீட்டுகளுக்கான விலைகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பயணச்சீட்டுகளை விநியோகிக்கும் நிறுவனங்களுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.