இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான அதிகாரப் பகிர்வு அவசியமாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். உடனடி மாற்றத்திற்கான அமைப்பினால் நேற்றுமுன்தினம் (29) ஏற்பாடு செய்யப்பட் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.சிறுபான்மை மக்களின் இனப்பிரச்சினைக்கு அரசியலமைப்பு ரீதியான நிரந்தர தீர்வு அவசியமாகும்.

யாழ்ப்பாணத்துக்கோ கிழக்கிற்கோ நல்ல அபிவிருத்தித் திட்டங்கள் வேலைவாய்ப்புகளை வழங்கினால் அதுவே போதுமானது என்றும் வேறொன்றும் தேவையில்லை என்றும் சில தலைவர்கள் கூறுகின்றனர். இது முழுமையான பொய்யாகும். அவர்களின் உரிமையை ஏன் அரசியலமைப்பில் வழங்க முடியாது. அதனைச் செய்யாமல் பிரச்சினை தீராது. அபிவிருத்தி செய்தால் மட்டும் போதும் என்று கூறுகின்றனர்.

தற்போது 13 ஆவது திருத்தச் சட்டம் தங்களுக்கு போதும் என அந்த மக்கள் கூறுவார்கள் எனின்இ அதனையேனும் செய்ய வேண்டும். நாட்டின் மீது அன்புள்ளவர்கள் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல விரும்பும் அனைவரும் 13 ஆவது திருத்தத்திற்கோ அல்லது அதுபோன்ற ஒன்றுக்கோ போராடி இந்த அரசாங்கத்திடமிருந்து அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.