எதிர்வரும் ஜுலை மாதத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ பேருந்து கட்டணச் சலுகைகளை மக்களுக்கு வழங்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more
அபிவிருத்தி குன்றிய நாடுகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்தாவது மாநாடு தற்போது கட்டாரின் டோஹா நகரில் இடம்பெற்று வருகின்றது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார். குறித்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, கட்டார் அரசாங்கத்தின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சுல்தான் பின் அல் சாத் முராய்க்கியை சந்தித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசியலமைப்பு சபை எதிர்வரும் 9ஆம் திகதி மீண்டும் கூடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான சில முக்கிய தீர்மானங்கள் அங்கு எடுக்கப்பட உள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்தக்கூடிய நாணய அலகாக மாற்றவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சகல பிரதான எதிர்க்கட்சிகளும் இணைந்து தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இணைந்தே இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளன.
பாடசாலை 3ஆம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதேவேளை, மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகமும் 3ஆம் தவணை முடிவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான Airbus A380-800 இன்று(05) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. விமானத்திற்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக குறித்த விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.நியூசிலாந்தின் ஒக்லண்ட் நகரிலிருந்து துபாய் நோக்கி பயணிக்கும் குறித்த EK 449 விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 62,800 லீட்டர் எரிபொருளை பெற்றுக் கொண்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தாமதமாவதால், பரீட்சார்த்திகள் பாரிய அநீதிக்கு உள்ளாகி வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சர் முன்மொழிந்த கொடுப்பனவுகளில் இருந்து ஆயிரம் ரூபாவைக் குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய – இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இந்தியாவில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த வேளையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ட்விட்டர் செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.