Header image alt text

இலங்கையில் அபாய நிலையில் வாழும் சிறார்களுக்கு உதவுவதற்காக ஜப்பான் அரசாங்கம் 1.8 மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளது. UNICEF நிறுவனத்திடம் ஜப்பான் அரசாங்கம் இந்த நன்கொடையை வழங்கியுள்ளது. Read more

அரசாங்கத்தின் வரி கொள்கையை உடனடியாக மாற்றுமாறு கோரி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படட பணிப்பகிஷ்கரிப்பை தற்காலிகமாக நிறைவு செய்வதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. Read more

இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டபடி உள்ளூராட்சி தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதியன்று நடத்தப்படும் என்பதற்கு சாத்தியப்பாடுகள் குறைவு என்று நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பு (பவ்ரல்) எதிர்வு கூறியுள்ளது அரசாங்கம் இந்த விடயத்தில் நீதிமன்ற முடிவுகளை கூட புறக்கணிப்பது வருந்தத்தக்கது என்று அமைப்பின் நிர்வாக இயக்குநர் ரோஹன ஹெட்டியாரச்சி குற்றம் சுமத்தியுள்ளார். Read more

கண்ணீர் அஞ்சலி

Posted by plotenewseditor on 15 March 2023
Posted in செய்திகள் 

இறுதிக் கிரியைகள் நாளை காலை 10.00 மணியளவில் தண்ணீரூற்று முள்ளியவளையில் நடைபெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்று (15) காலை 8 மணி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை, நாளை தற்காலிகமாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை (16) காலை 8 மணிக்கு தற்காலிகமாக கைவிடப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. Read more

தேர்தலுக்கான அச்சு நடவடிக்கைகளுக்காக பணம் வழங்குமாறு கோரி திறைசேரிக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளதாக அரச அச்சகம் அறிவித்துள்ளது. திறைசேரியின் நடவடிக்கை  பிரிவிற்கு குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்தார். Read more

தோழர் கார்த்திக் (கணபதிப்பிள்ளை மகேந்திரன் அவர்கள், செட்டிபாளையம்) 14.03.2021

உள்ளூராட்சி மன்றங்களின் புதிய பதவிக்காலம் தொடர்பில் அறிவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருடன் கலந்தாலோசித்து உரிய திகதி அறிவிக்கப்படும் என பிரதமர் கூறியுள்ளார். Read more

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொதுச்சேவை சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. Read more

வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான நிதி இதுவரை கிடைக்கவில்லை என அரச அச்சகம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக வாக்குச்சீட்டுகளை அச்சிட முடியாத நிலை காணப்படுவதாக அரச அச்சகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், 17 மாவட்டங்களுக்கான தபால் மூல வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். Read more