தோழர் ஆனா (ராசலிங்கம் மகேஸ்வரன்)மலர்வு – 28.11.1976
உதிர்வு – 02.05.2016
குருநாகலைப் பிறப்பிடமாகவும், வவுனியா சிதம்பரபுரத்தை வாழ்விடமாகவும் கொண்ட இவர் துணிவும், நேர்மையும், துடிப்பும் மிக்கவர். தனது அன்பாலும் தொண்டுகளாலும் மக்களின் மனதில் இடம்பிடித்தவர். சமூக மேம்பாட்டில் அதீத அக்கறை கொண்டு தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவர்.
சுவிற்சர்லாண்ட் சூரிச் மாநிலத்தில் தொழிலாளர் தினமானது சுவிஸ் தொழில்சங்கங்கள், இடதுசாரி அமைப்புகள், முற்போக்கு முன்னணிகள், சமூக மேம்பாட்டு அமைப்புகள், மற்றும் உரிமைக்காய் போராடும் பல இன மக்களுடன் இணைந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழக கிளையினரும் இணைந்து நிகழ்த்தப்பட்டது. இவ்வூர்வலத்தில் இலங்கைத் தமிழ் மக்களின் விடுதலைக்கும் அனைத்து இன மக்கள் மீதான அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்தெறிய அணிதிரளவும் அனைத்துலக ஆதரவு கோரியும் அறைகூவல் விடுக்கப்பட்டது.