சர்வதேச நாணய நிதிய பணிக்குழுவின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இன்று(11) முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இவர்கள் இலங்கையில் தங்கியிருப்பார்கள் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்கள பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசனும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இந்த விஜயத்தில் இணைந்து கொள்ளவுள்ளார். Read more
அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணி கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். காணி முகாமைத்துவம் தொடர்பிலான நிறுவனங்களின் சட்ட ஏற்பாடுகளில் திருத்தம் மேற்கொள்வது மற்றும் சரத்துக்களை திருத்துவது, உள்ளீடு செய்வது ஆகிய விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(10) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மன்னார்- தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் கிராம பகுதியில் வியாபார பொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்று இரு சிறுவர்களுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி கடத்துவதற்கு முற்பட்ட நிலையில் பொது மக்களின் உதவியுடன் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று மதியமளவில் வாகனத்தில் வியாபார பொருட்களை விற்பனை செய்ய வந்த வாகனம் ஒன்றில் இருந்த ஓட்டுநர் இவ்வீதி வழியாக பயணித்த இரு சிறுமிகளுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி வாகனத்தில் கடத்த முற்பட்ட சமயம் இரு பிள்ளைகளும் தப்பி சென்று கிராமத்தவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.