கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட காலத்தில் அவரை சதி செய்து, கொலை செய்ய குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி அப்போதைய பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஸவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி, குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு சிவலிங்கம் ஆரூரன் கைது செய்யப்பட்டார். Read more
XPress Pearl கப்பல் நட்டஈட்டு வழக்கை சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்திலிருந்து அந்நாட்டின் சர்வதேச வர்த்தக நீதிமன்றுக்கு மாற்றுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் எதிர்கால தீர்மானங்கள் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடப்பட்ட பின்னர் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படுமென சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. நட்ட ஈடு தொடர்பான வழக்கு நேற்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அந்நாட்டு நீதிமன்றம் இதனை தெரிவித்ததாக திணைக்களம் கூறியுள்ளது.
புதிய பாராளுமன்ற செயலாளர் நாயகமாக குஷானி ரோஹனதீர நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையின் அனுமதியின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற பணிக்குழாமின் பிரதானியாகவும், பாராளுமன்ற பிரதி பொதுச்செயலாளராகவும் குஷானி ரோஹனதீர கடமையாற்றியுள்ளார்.