இந்தியாவின் பாண்டிச்சேரி காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரையான பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளது. காரைக்காலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக IndSri Ferry Service நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்தார். இந்திய மத்திய அரசாங்கத்தின் இறுதிக்கட்ட அனுமதி இதுவரை பெறப்படாததால் குறித்த கப்பல் சேவையை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பட்டார். Read more
வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட P.S.M.சார்ள்ஸ் தனது கடமைகளை இன்று(22) பொறுப்பேற்றார். வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட P.S.M.சார்ள்ஸை வரவேற்கும் நிகழ்வொன்று வவுனியாவில் இன்று(22) நடைபெற்றது. வவுனியா வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியா நகர சபையின் அருகிலிருந்து A9 வீதியூடாக அவர் வாகனப் பேரணியாக அழைத்து வரப்பட்டார்.