பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக்க ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. எதிராக 77 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக்க ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது. சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த பிரேரணையை பாராளுமன்றத்தில் இன்று முற்பகல் சமர்ப்பித்தார். Read more
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தங்கம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. 3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 91 கையடக்க தொலைபேசிகளே இவ்வாறு அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். குறித்த தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளின் மொத்த பெறுமதி எட்டரை கோடி ரூபாவுக்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.