26-04-2023 அன்று இயற்கையெய்திய, யாழ்ப்பாணம் சுருவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் மகேஸ்வரி இரத்தினசபாபதி அவர்களின் (27.05.2023) 31ஆம் நாள் நினைவை முன்னிட்டு அவரது புதல்வரும், கழகத்தின் கனடா கிளை நிர்வாக உறுப்பினருமான தோழர் சங்கர் (விஜயசேகரன்) அவர்கள் கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக, வன்னிப் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் நலன் சார்ந்த உதவிகளுக்கான இரண்டு இலட்சம் ரூபா (200,000/-) நிதியினை வழங்கியுள்ளார்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் லண்டன் தோழர்கள் முகுந்தன் 50,000/- சிவபாலன் 20,000/-, சுவிஸ் தோழர் வசந்தன் 40,000/- என மொத்தம் ரூபா 110,000/- நிதியில் திருகோணமலை பாலையூற்று ரெட் டயமண்ட் விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொள்வனவு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரமுகர்களுக்கான பிரிவில் சோதனைகளை முன்னெடுப்பதில் விசேட அவதானம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு தெரிவித்தது. நிதி அமைச்சினால் இதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சுங்க பேச்சாளர் சுதந்த சில்வா தெரிவித்தார். இதன்படி, சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அலி சப்ரி ரஹீமை இராஜினாமா செய்யுமாறு கோருவதற்கான தீர்மானமொன்றை கொண்டு வருவது தொடர்பில், பாராளுமன்ற விடயங்கள் தொடர்பான தெரிவுக்குழு கவனம் செலுத்தியுள்ளது. இன்று (26) மாலை நடைபெற்ற பாராளுமன்ற விடயங்கள் தொடர்பான தெரிவுக்குழுவில், கட்சித் தலைவர்களால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த இலகு ரயில் செயற்றிட்டம் இடையில் கைவிடப்பட்டமை தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவலை தெரிவித்துள்ளார். நேற்று (25) நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பான் பிரதமர் Fumio Kishida-வை டோக்கியோ நகரில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.
இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கினால், நாட்டில் அணு மின் உற்பத்தி நிலையத்தை (Nuclear Power Plant) நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள தமது நாடு தயாராகவுள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Levan S. Dzhagaryan தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இந்த விடயம் தொடர்பில் பதிவிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் எரிசக்தி அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும் அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பின் முன்னாள் மேயர் ரோஸி சேனாநாயக்க ஜனாதிபதியின் உள்ளூராட்சி செயற்பாடுகள் தொடர்பான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளரினால் அதற்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
25.05.1987இல் மரணித்த கழகத்தின் முதலாவது மன்னார் மாவட்ட தலைவர் தோழர் நடேசன் (பொன்னுத்துரை செல்வராஜா – வவுனியா) அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….
25.05.2000இல் வவுனியாவில் மரணித்த தோழர்கள் வின்சன் (கந்தப்பு ஜெயராசா) – கரவெட்டி கிழக்கு), பண்ணை (பெருமாள் விஜயராம்) ஆகியோரின் 23ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்களை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.