அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணி கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். காணி முகாமைத்துவம் தொடர்பிலான நிறுவனங்களின் சட்ட ஏற்பாடுகளில் திருத்தம் மேற்கொள்வது மற்றும் சரத்துக்களை திருத்துவது, உள்ளீடு செய்வது ஆகிய விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(10) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். Read more
மன்னார்- தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் கிராம பகுதியில் வியாபார பொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்று இரு சிறுவர்களுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி கடத்துவதற்கு முற்பட்ட நிலையில் பொது மக்களின் உதவியுடன் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று மதியமளவில் வாகனத்தில் வியாபார பொருட்களை விற்பனை செய்ய வந்த வாகனம் ஒன்றில் இருந்த ஓட்டுநர் இவ்வீதி வழியாக பயணித்த இரு சிறுமிகளுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி வாகனத்தில் கடத்த முற்பட்ட சமயம் இரு பிள்ளைகளும் தப்பி சென்று கிராமத்தவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இலங்கை மற்றும் வெளிநாட்டு பிரஜைகளுக்காக அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் விடுதிகளை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) பணியாளர்கள் குழுவொன்று நாளை முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது. இந்த வருடத்தின் பிற்பகுதியில் முதல் மறுஆய்வு பணிக்கு முன்னதாக, இலங்கையுடன் வழக்கமான ஆலோசனைகளின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமைகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசனும் இந்த பயணத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
09.05.1985இல் வல்வெட்டித்துறையில் மரணித்த தோழர் சுகுணன் (சுவேந்திரன் – வல்வெட்டி) அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..
கொழும்பு – துறைமுகத்துக்கு அருகே தீப்பிடித்து மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கோரி இலங்கை அரசாங்கம் தாக்கல் செய்த வழக்கு சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று (9) முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் சிங்கப்பூர் சட்ட நிறுவனம் ஒன்று இந்த வழக்கில் முன்னிலையாகவுள்ளது.
எமது கட்சியின் உபதலைவர்களுள் ஒருவரும், கட்சியின் முன்னாள் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான (தோழர் பக்தன்) மகாதேவன் சிவநேசன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் இன்று…
பங்களாதேஸுடனான இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தையை இந்த மாத இறுதியில் இலங்கை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. குறித்த சந்திப்பானது எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக, ஜனாதிபதி செயலகத்தின் சர்வதேச வர்த்தக அலுவலக பேச்சாளர் கே.ஜே. வீரசிங்க தெரிவித்துள்ளார். மெய்நிகர் மூலம் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில், ஒப்பந்தம் குறித்த யோசனைகள் மற்றும் அதனை எட்டுவதற்கான இறுதி திகதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் எட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்காக உலக வங்கியுடன் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.
அரச ஊழியர்களின் வேதனத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். பொருளாதாரத்தில் அரசாங்கம் எதிர்பார்த்துள்ள இலக்கை அடைந்தால் அரச ஊழியர்களின் வேதனத்தை அதிகரிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.