ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக கிளிநொச்சி கோணாவில் கிழக்கைச் சேர்ந்த திருமதி கோ.பிரசாந்தினி என்பவருக்கு வாழ்வாதார உதவியாக சிறுபோக பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்காக ரூபா 30,000/- நிதியுதவி வழங்கியுள்ளார்.
இன்று 01.06.2023 முற்பகல் 10.30மணியளவில் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திரு. வே.சிவபாலசுப்பிரமணியம் (தோழர் மணியம்), கட்சியின் மாவட்ட பொருளாளர் திரு. நித்தியானந்தன் (தோழர் துரை) ஆகியோர் மேற்படி நிதியுதவியை பயனாளியிடம் வழங்கிவைத்தார்கள்.
