Header image alt text

பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரிசியா ஸ்கொட்லண்டை (Patricia Scotland) சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, பொதுநலவாய அமைப்பில் முன்னெடுக்கப்படவுள்ள டிஜிட்டல்மயமாக்கல் செயற்றிட்டம் தொடர்பில் அமைப்பின் செயலாளர் நாயகம் – ஜனாதிபதி இடையே கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read more

பொறுப்புக்கூறல் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சில பிரேரணைகளை கவலையளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் வோல்கர் டர்க் (Volker Turk) தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது காணப்படும் 900 மீட்டர் ஓடுபாதையை புனரமைத்து, புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்காக 168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Read more