போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் ஈடுபடும் சுங்க அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 118 துப்பாக்கிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார். திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இதனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.