Header image alt text

34வது வீரமக்கள் தினம்..

Posted by plotenewseditor on 27 June 2023
Posted in செய்திகள் 

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவையை அடுத்த மாதம்  15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை ஜனவரி 5 ஆம் திகதி முதல் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து  காங்கேசன்துறை வரையான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. Read more

இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள திட்டம் (Sri Lanka Unique Digital Identity Project – SL-UDI) நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். தொழில்நுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுவின் முதலாவது கூட்டம் பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற போதே இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இதனை தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது. Read more