Header image alt text

10.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர் மதி (முருகேசு ரத்தினவேல் – முகத்தான்குளம்) அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….
10-06-2020 அன்று ஜெர்மனியில் மரணித்த கழகத்தின் சண்டிலிப்பாய் பிரதேச முன்னாள் பொறுப்பாளர் தோழர் கௌரி (விஜயராஜா கெளரீஸ்வரன் – சண்டிலிப்பாய்) அவர்களின் மூன்றாமாண்டு நினைவுநாள் இன்று..
1986 பிற்பகுதியில் கழகம் தனது செயல்பாடுகளை தளத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தியபோது பல கிழக்கு மாகாண தோழர்களை பாதுகாப்பாக வைத்திருந்து அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைத்த அவரது உதவிகள் என்றும் நினைவுகூரத்தக்கது.

இதுவரை விநியோகிக்க முடியாதுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களை மூன்றாம் தரப்பினர் மூலம் விநியோகிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அதற்கு தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தை பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார். 850,000  சாரதி அனுமதிப்பத்திரங்கள் மூன்றாம் தரப்பினர் ஊடாக அச்சிட்டு, விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் என்று திணைக்களம் கூறியுள்ளது. Read more

LGBTQIA+ சமூகத்தினர் ( lesbian, gay, bisexual, transgender, intersex, queer/questioning, asexual) மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சுயமரியாதை நடைபவனி ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. ஜூன் மாதம் முழுவதும் LGBTQIA+ சமூகத்தினரின் சுயமரியாதை மாதமாக சர்வதேச ரீதியாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த சுயமரியாதை மாதத்தை முன்னிட்டு, ‘யாழ். சுயமரியாதை வானவில் பெருமிதம் – 2023’ நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக இன்று நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. Read more