Header image alt text

அடுத்த 05 வருடங்களுக்குள் ஆங்கில மொழியை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்து ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக கொண்டுச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆங்கில மொழிக்கு மாத்திரம் மட்டுப்படாமல் சீனா, ஜப்பான், அரபு உள்ளிட்ட மொழிகளையும் கற்றுகொள்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். Read more

வவுனியா – மன்னார் மார்க்கத்தின் பறயனாலங்குளம் 29 ஆவது மைல்கல் பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். பாடசாலைக்கு தனது மகளை அனுப்பச் சென்ற தாயும் அவரது 6 வயதான மகளுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர். வவுனியா – கன்னாட்டியை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.  வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் நின்றவர்கள் மீது மோதியுள்ளது. Read more

இரண்டு திணைக்களங்களை நிரந்தரமாக மூடுவதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. உள்ளக வர்த்தக திணைக்களம், தொலைத்தொடர்பாடல் திணைக்களம் ஆகியவற்றை மூடுவதற்கான வர்த்தமானியே வௌியிடப்பட்டுள்ளது. இந்த திணைக்களங்கள் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சின் கீழ் இயங்குகின்றன. இந்த நிலையில் அவற்றை நிரந்தரமாக மூடுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ளது.