Header image alt text

நாட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இணைய வழி கடவுச்சீட்டு முறைமையின் கீழ் இதுவரை 3 ஆயிரத்து 265 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. நேரடியாக கடவுச்சீட்டை பெற செல்பவர்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணத்தை பெறும் சம்பவங்கள் அண்மைக்காலத்தில் பதிவாகியிருந்தது. Read more

19.06.2018இல் மரணித்த தோழர் கமல் அண்ணா (சின்னையா கமலபாஸ்கரன் – லண்டன்) அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாள் இன்று….
தமிழ் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்த முன்னோடிகளில் ஒருவரான திருகோணமலையை பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த தோழர் சின்னையா கமலபாஸ்கரன் அவர்கள் மரணித்து இன்று ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன.

Read more

19.06.2005இல் வவுனியா கோவில்குளத்தில் மரணித்த தோழர் கிளியன் (வல்லிபுரம் உதயகுமாரசிங்கம் – ஓமந்தை) அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் இன்று(19) ஆரம்பமாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் நாளை மறுதினம் 21 ஆம் திகதி  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Turk வாய்மொழி மூல உரை நிகழ்த்தவுள்ளார். Read more

முன்னாள் வௌிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரோஹித்த போகொல்லாகம இதற்கு முன்னர் கிழக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.