Header image alt text

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக சைக்கிளில் ஐஸ் கிறீம் விற்பனை செய்துவரும் மட்டக்களப்பு எரிவில் பாடசாலை வீதியைச் சேர்ந்த திரு. கந்தசாமி நடராசா என்பவருக்கு வாழ்வாதார உதவியாக ரூபா 25,000/- நிதியுதவி வழங்கியுள்ளார். எரிவிலைச் சேர்ந்த சமூக சேவையாளர் மஞ்சுளா அவர்களின் ஊடாக இவ்வுதவி பயனாளிக்கு வழங்கிவைக்கப்பட்டது.

30.06.1986இல் யாழ். கைதடியில் மரணித்த தோழர் பார்த்தி (ஏகாம்பரம் பார்த்தீபன் – திருகோணமலை) அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..

அஸ்வெசும திட்டத்தினால் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கான மேன்முறையீடுகள், ஆட்சேபனைகள் என்பன ஒன்லைன் மூலம்  வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று பதிவு செய்யப்பட்டன. வவுனியா மாவட்டத்தின் தோணிக்கல் , கூமாங்குளம், மூன்றுமுறிப்பு , வெளிக்குளம் , கோவில்குளம் ஆகிய ஜந்து கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட மக்களின் மேன்முறையீடுகளும் ஆட்சேபனைகளும் இன்று  பதிவு செய்யப்பட்டன.  இதன்போது, 300-க்கும் மேற்பட்ட பயனாளிகள் தமது முறையீடுகளை முன்வைத்தனர்.

புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி – கரிக்கட்டை பகுதியில் இன்று (30) காலை பஸ் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ்ஸில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தீ பரவியுள்ளது. பஸ் என்ஜின் வெப்பமடைந்தமையினால், தீ பரவியிருக்கலாம் என நம்பப்படுவதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, தீயணைக்கும் வாகனங்களின் உதவியுடன் காலை 6 மணியளவில் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், பஸ் முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளது. Read more