Header image alt text

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க தமது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இதனை உறுதிப்படுத்தினார். தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து தாம் விலகுவதாக குறிப்பிட்டு, அமைச்சின் செயலாளருக்கு சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். Read more

பிரித்தானியாவிற்கு அருகிலுள்ள Diego Garcia தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து வருவதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றுடன் தொடர்ச்சியாக தொடர்புகொண்டு தகவல்களைக் கேட்டறிந்து வருவதாக வௌிவிவகார அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். Read more