இன்று (01.06.2023) காலை 8.30மணியளவில் செயலதிபர் அமரர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுடன் மேற்படி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. நினைவில்லப் பிரிவு பொறுப்பாளர் தோழர் ஜி.ரி லிங்கநாதன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் பீற்றர், மத்தியகுழு உறுப்பினர்களான தோழர்கள் மோகன், சிவம், மாவட்ட அமைப்பாளர் தோழர் குகன், மாவட்ட செயலாளர் தோழர் மூர்த்தி,

தோழர்கள் கொன்சால், சூரி, சிவா, ரவி, ஓசை, கோபி (அமெரிக்கா), திலீபன் (ஜேர்மன்), மு.கண்ணதாசன் (கனடா), உதயசூரியன், அன்ரன், மாறன், நரேந்திரன் கணேசலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.