யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாரத்தின் ஏழு நாட்களும் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டதாக துறைமுகங்கள், கற்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். தற்போது வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Read more
18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வரி தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் கோப்பு ஒன்றை திறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மே மாதம் 31 ஆம் திகதி இது தொடர்பான வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கு ஏற்ப 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவரும் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் கோப்பொன்றை திறக்க வேண்டும்.
இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா (Kenji Okamura) அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். தனது விஜயத்தின் போது, பொருளாதார ஸ்திரத்தன்மையை மீள எட்டுவதற்கான நிதி நடவடிக்கைகள், வருமான வழிமுறைகளின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.