தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டம் என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான சட்டமூல வரைவொன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். Read more
ஊடகவியலாளர்களுக்கு சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கும், இலத்திரனியல் ஊடக உரிமங்களை இரத்து செய்யும் சட்டமூலத்தை முன்வைத்துள்ள அதேவேளை, ஊடகங்களை நசுக்குவதற்கான சட்டங்களைக் கொண்டு வர அரசாங்கம் மற்றுமொரு முயற்சியை மேற்கொண்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானங்களிலேயே இந்த விடயம் வௌிக்கொணரப்பட்டுள்ளது.