கிளாலியில் வசிக்கின்ற பாடசாலை மாணவி ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களால் துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டது. இன்று மாலை தென்மராட்சியின் விடத்தற்பளை கிராமத்தில் பிரதேச சபை முன்னாள் உபதவிசாளர் செ.மயூரன் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் லண்டன் கிளை உறுப்பினர் பாலா அவர்களின் நிதிப்பங்களிப்பின் மூலம் பெறப்பட்ட துவிச்சக்கரவண்டியே கையளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை (19) ஆரம்பமாகவுள்ளது. கூட்டத் தொடர் ஜூன் 19 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 14 ஆம் திகதி வரை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெறவுள்ளது இலங்கை தொடர்பிலான வாய்மொழி மூல அறிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்போது இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் விடயங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
Online ஊடாக கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் நடைமுறை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஹோமாகம பிரதேச செயலகத்தில் இதன் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
மானிப்பாய் சாவல்கட்டு அந்திக்குழி ஞானவைரவர் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நூறு அடி உயரமான இராஜகோபுரற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை இடம் பெற்றது. ஆலய பிரதம குரு தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இராஜகோபுரத்துக்கான அடிக்கல்லை சம்பிரதாயபூர்வமாக நாட்டி வைத்தார்.