கிளாலியில் வசிக்கின்ற பாடசாலை மாணவி ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களால் துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டது. இன்று மாலை தென்மராட்சியின் விடத்தற்பளை கிராமத்தில் பிரதேச சபை முன்னாள் உபதவிசாளர் செ.மயூரன் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் லண்டன் கிளை உறுப்பினர் பாலா அவர்களின் நிதிப்பங்களிப்பின் மூலம் பெறப்பட்ட துவிச்சக்கரவண்டியே கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பச்சிலைப்பள்ளி அமைப்பாளர் ஜெயா(சின்னவன்) ஆகியோரும் கலந்துகொண்டனர்.