தாயகக் குரல் –Posted by plotenewseditor on 17 June 2023
Posted in செய்திகள்
தாயகக் குரல் –Posted by plotenewseditor on 16 June 2023
Posted in செய்திகள்
அடுத்த 05 வருடங்களுக்குள் ஆங்கில மொழியை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்து ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக கொண்டுச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆங்கில மொழிக்கு மாத்திரம் மட்டுப்படாமல் சீனா, ஜப்பான், அரபு உள்ளிட்ட மொழிகளையும் கற்றுகொள்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 16 June 2023
Posted in செய்திகள்

வவுனியா – மன்னார் மார்க்கத்தின் பறயனாலங்குளம் 29 ஆவது மைல்கல் பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். பாடசாலைக்கு தனது மகளை அனுப்பச் சென்ற தாயும் அவரது 6 வயதான மகளுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர். வவுனியா – கன்னாட்டியை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர். வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் நின்றவர்கள் மீது மோதியுள்ளது. Read more
Posted by plotenewseditor on 16 June 2023
Posted in செய்திகள்
இரண்டு திணைக்களங்களை நிரந்தரமாக மூடுவதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. உள்ளக வர்த்தக திணைக்களம், தொலைத்தொடர்பாடல் திணைக்களம் ஆகியவற்றை மூடுவதற்கான வர்த்தமானியே வௌியிடப்பட்டுள்ளது. இந்த திணைக்களங்கள் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சின் கீழ் இயங்குகின்றன. இந்த நிலையில் அவற்றை நிரந்தரமாக மூடுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 15 June 2023
Posted in செய்திகள்
கிளாலியில் வசிக்கின்ற பாடசாலை மாணவி ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களால் துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டது. இன்று மாலை தென்மராட்சியின் விடத்தற்பளை கிராமத்தில் பிரதேச சபை முன்னாள் உபதவிசாளர் செ.மயூரன் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் லண்டன் கிளை உறுப்பினர் பாலா அவர்களின் நிதிப்பங்களிப்பின் மூலம் பெறப்பட்ட துவிச்சக்கரவண்டியே கையளிக்கப்பட்டுள்ளது.Posted by plotenewseditor on 15 June 2023
Posted in செய்திகள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை (19) ஆரம்பமாகவுள்ளது. கூட்டத் தொடர் ஜூன் 19 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 14 ஆம் திகதி வரை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெறவுள்ளது இலங்கை தொடர்பிலான வாய்மொழி மூல அறிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்போது இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் விடயங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. Read more
Posted by plotenewseditor on 15 June 2023
Posted in செய்திகள்
Online ஊடாக கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் நடைமுறை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஹோமாகம பிரதேச செயலகத்தில் இதன் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். Read more
Posted by plotenewseditor on 15 June 2023
Posted in செய்திகள்
மானிப்பாய் சாவல்கட்டு அந்திக்குழி ஞானவைரவர் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நூறு அடி உயரமான இராஜகோபுரற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை இடம் பெற்றது. ஆலய பிரதம குரு தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இராஜகோபுரத்துக்கான அடிக்கல்லை சம்பிரதாயபூர்வமாக நாட்டி வைத்தார்.Posted by plotenewseditor on 14 June 2023
Posted in செய்திகள்
Sea of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பு உலகின் பிரதான கப்பல் போக்குவரத்து மார்க்கத்தை கேந்திரமாகக் கொண்டு அமைந்துள்ளது. பாரியளவிலான கப்பல்கள் பயணிக்கும் கிழக்கு , மேற்கு கப்பல் பாதை தெய்வேந்திரமுனையில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் உள்ளது. வருடத்திற்கு சுமார் 40,000 கப்பல்கள் இலங்கை ஊடான கப்பல் மார்க்கத்தை பயன்படுத்துகின்றன. எவ்வாறாயினும், இந்த கப்பல் மார்க்கத்தை இலங்கையில் இருந்து தூரமாக்க வேண்டும் என IMO எனப்படும் சர்வதேச கடல்சார் அமைப்பு பரிந்துரைத்துள்ளது. Read more