Header image alt text

சர்வதேச காவல்துறையான இன்டர்போலின் சிவப்பு அறிவிப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள 6,872 தப்பியோடியவர்களில் ஏழு இலங்கையர்களும் உள்ளடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏழு பேரில், நான்கு இலங்கையர்கள் இலங்கையில் ‘தேடப்படுபவர்கள்’ என்று பட்டியலிடப்பட்டுள்ளனர். ஏனைய மூன்று பேர் தங்கள் பிரதேசங்களில் செய்த குற்றங்கள் தொடர்பாக வெளிநாடுகளால் செய்யப்பட்ட கோரிக்கைகளின் பேரில் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். Read more

ரயில்வே திணைக்களத்துக்கு சொந்தமான காணிகளை குத்தகைக்கு வழங்க முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. சுற்றுலா அபிவிருத்தி மற்றும் ஏனைய செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு தனியார் துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். Read more

தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டம் என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான சட்டமூல வரைவொன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். Read more

ஊடகவியலாளர்களுக்கு சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கும், இலத்திரனியல் ஊடக உரிமங்களை இரத்து செய்யும் சட்டமூலத்தை முன்வைத்துள்ள அதேவேளை, ஊடகங்களை நசுக்குவதற்கான சட்டங்களைக் கொண்டு வர அரசாங்கம் மற்றுமொரு முயற்சியை மேற்கொண்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானங்களிலேயே இந்த விடயம் வௌிக்கொணரப்பட்டுள்ளது. Read more

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க தமது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இதனை உறுதிப்படுத்தினார். தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து தாம் விலகுவதாக குறிப்பிட்டு, அமைச்சின் செயலாளருக்கு சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். Read more

பிரித்தானியாவிற்கு அருகிலுள்ள Diego Garcia தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து வருவதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றுடன் தொடர்ச்சியாக தொடர்புகொண்டு தகவல்களைக் கேட்டறிந்து வருவதாக வௌிவிவகார அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். Read more

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 17ஆம் திகதி லண்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி பெரிஸ் கிளப் உறுப்பினர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கடன் நெருக்கடிக்கான தீர்வு மற்றும் கடன் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவளிப்பதாக பெரிஸ் கிளப் முன்னதாக அறிவித்திருந்தது. Read more

அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ள ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தொடர்பான யோசனை நிறைவேற்றப்பட்டால் 06 மாதங்களுக்குள் தற்போது ஔிபரப்பு சேவையை முன்னெடுக்கும் 33 நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்தாகுமென ஞாயிறு மவ்பிம பத்திரிகை இன்று(11) செய்தி வௌியிட்டுள்ளது. நாட்டில் தற்போது உள்ள 33 ஔிபரப்பு சேவை நிறுவனங்கள், 1966 ஆண்டின் 37 ஆம் இலக்க வானொலி கூட்டுத்தாபன சட்டத்தின் கீழும் 1982 ஆண்டின் 06 ஆம் இலக்க ரூபவாஹினி கூட்டுத்தாபன சட்டத்தின் கீழும் அனுமதிப்பத்திரம் பெற்று இயங்குகின்றன. Read more

10.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர் மதி (முருகேசு ரத்தினவேல் – முகத்தான்குளம்) அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….
10-06-2020 அன்று ஜெர்மனியில் மரணித்த கழகத்தின் சண்டிலிப்பாய் பிரதேச முன்னாள் பொறுப்பாளர் தோழர் கௌரி (விஜயராஜா கெளரீஸ்வரன் – சண்டிலிப்பாய்) அவர்களின் மூன்றாமாண்டு நினைவுநாள் இன்று..
1986 பிற்பகுதியில் கழகம் தனது செயல்பாடுகளை தளத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தியபோது பல கிழக்கு மாகாண தோழர்களை பாதுகாப்பாக வைத்திருந்து அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைத்த அவரது உதவிகள் என்றும் நினைவுகூரத்தக்கது.