இதுவரை விநியோகிக்க முடியாதுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களை மூன்றாம் தரப்பினர் மூலம் விநியோகிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அதற்கு தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தை பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார். 850,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் மூன்றாம் தரப்பினர் ஊடாக அச்சிட்டு, விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் என்று திணைக்களம் கூறியுள்ளது. Read more
LGBTQIA+ சமூகத்தினர் ( lesbian, gay, bisexual, transgender, intersex, queer/questioning, asexual) மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சுயமரியாதை நடைபவனி ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. ஜூன் மாதம் முழுவதும் LGBTQIA+ சமூகத்தினரின் சுயமரியாதை மாதமாக சர்வதேச ரீதியாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த சுயமரியாதை மாதத்தை முன்னிட்டு, ‘யாழ். சுயமரியாதை வானவில் பெருமிதம் – 2023’ நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக இன்று நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
09.06.1985இல் மரணித்த தோழர் சுதன் (மா.சிவஞானம்) அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று……
2023 வாக்காளர் இடாப்பில் ஒன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. www.elections.gov.lk என்னும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, வாக்காளர்கள் தம்மை பதிவு செய்ய முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார். 2023 வாக்காளர் இடாப்பிற்கான திருத்தங்கள் இந்நாட்களில் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு படிவங்கள் கிராம உத்தியோகத்தர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்
அவசர அபிவிருத்தி நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக குறைந்த வட்டி வீதத்தில் வழங்கப்படும் சலுகை கடனுதவியைப் பெறுவதற்கு இலங்கைக்கு தகுதியுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அங்கீகரித்துள்ளது. குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும் சலுகை உதவிகளை பெற்றுக்கொள்வதன் மூலம், பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்தல், வறிய மற்றும் பாதிப்பை எதிர்நோக்கக்கூடிய மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட அவசர அபிவிருத்தி நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான இலங்கையின் வாய்ப்புகள் விரிவுபடுத்தப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (08) நடைபெற்ற கலந்துரையாடலொன்றின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். சட்ட வரைவு, நிறுவன நடவடிக்கைகள், காணிப் பிரச்சினைகள், கைதிகளை விடுதலை செய்தல், அதிகார பரவலாக்கம் போன்ற விடயங்களில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பில் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.
மலர்வு 13.08.1939
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி தேசிய மக்கள் சக்தியால் தேர்தல்கள் திணைக்களத்திற்கு முன்பாக இன்று (08) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ‘மக்கள் ஆணை இல்லாத ஜனாதிபதிக்கு மக்களின் கருத்தை நசுக்குவதற்கு இடமளியோம் , உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்து’ என்ற தொனிப்பொருளில் இன்று மாலை 3 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.
உடனடியாக தேர்தலை நடத்தி மக்களுக்கு தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். கட்டானை கொச்சிக்கடை புனித அந்தோனியார் வித்தியாலயத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.
ஷெல் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் எரிபொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தில் ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks) நிறுவனத்துடன் இலங்கை கையெழுத்திட்டது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.