நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் சிறப்புரிமைகளை மீறியும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் உரிமைகளை மீறியும் பொலிசார் நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவரான, நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகளுக்காக கிராமசேவகர் இதுவரையில் தங்களது வீடுகளுக்கு வரவில்லையாயின் அது குறித்து அறியப்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய கிராமசேவகர் சங்கம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. வாக்காளர் பெயர்ப்பட்டியலின் திருத்தங்களுக்கு அமைவான மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை ஒரு மாத காலத்துக்குள் நிறைவுசெய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறியப்படுத்தி உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கமல் கித்சிறி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உள்ள சகல அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்தாலும் 50 சதவீதமான பலத்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க சகலரும் ஒன்றுபட வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற 2023 மற்றும் 2024 தேசிய சட்ட மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாரத்தின் ஏழு நாட்களும் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டதாக துறைமுகங்கள், கற்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். தற்போது வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வரி தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் கோப்பு ஒன்றை திறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மே மாதம் 31 ஆம் திகதி இது தொடர்பான வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கு ஏற்ப 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவரும் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் கோப்பொன்றை திறக்க வேண்டும்.
இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா (Kenji Okamura) அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். தனது விஜயத்தின் போது, பொருளாதார ஸ்திரத்தன்மையை மீள எட்டுவதற்கான நிதி நடவடிக்கைகள், வருமான வழிமுறைகளின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக கிளிநொச்சி கோணாவில் கிழக்கைச் சேர்ந்த திருமதி கோ.பிரசாந்தினி என்பவருக்கு வாழ்வாதார உதவியாக சிறுபோக பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்காக ரூபா 30,000/- நிதியுதவி வழங்கியுள்ளார்.
இன்று (01.06.2023) காலை 8.30மணியளவில் செயலதிபர் அமரர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுடன் மேற்படி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. நினைவில்லப் பிரிவு பொறுப்பாளர் தோழர் ஜி.ரி லிங்கநாதன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் பீற்றர், மத்தியகுழு உறுப்பினர்களான தோழர்கள் மோகன், சிவம், மாவட்ட அமைப்பாளர் தோழர் குகன், மாவட்ட செயலாளர் தோழர் மூர்த்தி,
20 ஆம் நூற்றாண்டின் “தமிழ் கலாசார இனப்படுகொலை” என்று கூறப்படும் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 42ஆவது ஆண்டு நினைவுதினம், இன்றாகும். 1981ம் ஆண்டு ஜூன்மாதம் 01ம்திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி கேட்டு யாழ். நடமாடும் நூலகம் என போற்றப்பட்டு வந்த பன்மொழிப் புலவர் தாவிது அடிகளார் மாரடைப்பால் மரணமானார்.
01.06.1983இல் வவுனியாவில் மரணித்த தோழர் நாதன் (சிதம்பரநாதன்- பண்ணாகம்) அவர்களின் 40ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…