தமிழ் தேசியப் பற்றாளர்Posted by plotenewseditor on 30 September 2023
						Posted in செய்திகள் 						  
தமிழ் தேசியப் பற்றாளர்Posted by plotenewseditor on 30 September 2023
						Posted in செய்திகள் 						  
வருமானத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினால், நாட்டு மக்கள் மத்தியில் கடுமையான சமூக அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள ‘ 2023 – செப்டம்பர் – பொது நிர்வாக பகுப்பாய்வு மதிப்பீட்டு அறிக்கை’யில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 30 September 2023
						Posted in செய்திகள் 						  
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T. சரவணராஜா தனது பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பில் ஆழ்ந்த கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சட்ட ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் நீதித்துறை சார்ந்தவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் தாம் கடமைப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 29 September 2023
						Posted in செய்திகள் 						  
ஶ்ரீ லங்கன் விமான சேவையின் பயணங்கள் இரத்து செய்யப்படுகின்றமை, தாமதமாகின்றமை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை (01) கலந்துரையாடப்படவுள்ளது. ஶ்ரீ லங்கன் விமான நிலைய தொழிற்சங்க உறுப்பினர்கள் இதில் பங்கேற்கவுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார். கடந்த சில நாட்களாக ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்களின் பல விமானப் பயணங்கள்  தாமதமடைந்ததுடன், சில விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டிருந்தன.  Read more
Posted by plotenewseditor on 29 September 2023
						Posted in செய்திகள் 						  
29.09.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் கனி (செபமாலை ராயப்பு – கன்னாட்டி), இராசலிங்கம் ரஞ்சன் (செட்டிபாளையம்), நவீனன் (கந்தசாமி இன்பராசா – மகிழடித்தீவு) ஆகியோரின் 32ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 29 September 2023
						Posted in செய்திகள் 						  
முல்லைத்தீவு நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதி T.சரவணராஜா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலத்தில் அதிகளவில் பேசப்பட்ட சில வழக்குகள்  நீதவான் T.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. Read more
Posted by plotenewseditor on 28 September 2023
						Posted in செய்திகள் 						  
தனிப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அல்லது தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் தங்கள் உரிமங்களை புதுப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு இன்று அறிவித்துள்ளது. அதன்படி, துப்பாக்கி உரிமங்களை ஒக்டோபர் 01 முதல் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் புதுப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விபரங்களை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமம் புதுப்பித்தல் நடவடிக்கை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் மேற்கொள்ளப்படாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
Posted by plotenewseditor on 28 September 2023
						Posted in செய்திகள் 						  
ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான 2  விமானப் பயணங்கள் இன்று(28)  தாமதமாகின. அத்துடன், மற்றுமொரு விமானப் பயணத்தை இரத்துச் செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. பங்களாதேஷ் தலைநகரான டாக்கா நோக்கி பயணிக்கவிருந்த UL 189 இலக்க விமானம், தொழில்நுட்ப கோளாறுக்குள்ளானமையினால் பயணத்தை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 27 September 2023
						Posted in செய்திகள் 						  
27.09.1987இல் கல்நாட்டினகுளத்தில் மரணித்த தோழர்கள் காஸ்ட்ரோ ( முல்லைத்தீவு), நந்தீஸ் ( முல்லைத்தீவு), கம்பன் (திருநகர்) ஜெயராஜ் உள்ளிட்ட ஏழு தோழர்களினதும் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
Posted by plotenewseditor on 27 September 2023
						Posted in செய்திகள் 						  
திருகோணமலை, பாலையூற்று முருகன் கோவிலடி கிராம பெண்களுக்கு சக்தி மாதர் சங்கத்தினால் இலவச தையல் பயிற்சி செயற்றிட்டத்தின் ஆரம்ப கட்டமாக இன்று தையல் பயிற்சி ஆசிரியையினால், முதற் கட்டமாக முப்பது(30) சக்தி மாதர் சங்க உறுப்பினர்களுக்கு பயிற்சி தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் தையல் வகை, நுட்பங்கள் , NVQ4 தரச்சான்றிதழின் பெறுமதி போன்ற முக்கியமான விடயங்கள் மற்றும் பயிற்சி விதிமுறைகள் என்பன விரிவான விளக்கங்களுடன் சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.