01.09.2015இல் திருகோணமலையில் மரணித்த மூதூர் கடற்கரைச்சேனையைப் பிறப்பிடமாகவும், நாயன்மார்த்திடல், தம்பலகாமத்தை வதிவிடமாகவும் கொண்ட அமரர் கார்த்திகேசு திருநாவுக்கரசு அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவுநாள் இன்று……
1980களில் திருகோணமலை மாவட்டத்தில் காந்தீயத்தின் முக்கிய செயற்பாட்டாளராகவும், மூதூர்ப் பகுதி காந்தீய பொறுப்பாளராகவும், திருமலை மாவட்டத்தில் புளொட்டின் ஆரம்பகால உறுப்பினராகவும், மூதூர்ப் பகுதி அமைப்பாளராகவும் செயற்பட்டவர்.

காந்தீயம், புளொட் ஆகியவற்றின் செயற்பாடுகளில் தன்னையும் இணைத்துக் கொண்டு தனது குடும்பத்தையும் பங்கெடுக்கச் செய்த அமரர் திருநாவுக்கரசு அவர்கள் மறைந்த தோழர் பார்த்தன் (இரா.ஜெயச்சந்திரன்) அவர்களோடு தோளோடு தோள்நின்று செயற்பட்டவர்.