உலகின் மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனமான ஃபார் ஷிப்பிங் நிறுவனம் இலங்கையில் பயிற்சி பெற்ற கப்பல் பணியாளர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க இணங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் நேற்று துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவைச் சந்தித்த போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. Read more
தமிழ் மக்கள் வாழுகின்ற பகுதிகளில் விகாரைகளை புகுத்துவது சட்டவிரோதமான செயல் என இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவிக்கின்றார். சூரியன் வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்தார். அத்துடன், வடக்கு மாகாணத்தில் தற்போது காணப்படுகின்ற பௌத்த பண்பாட்டு சின்னங்கள் தமிழ் மக்களின் உரிமைகளாகும். ஆனால் தற்போது புகுத்தப்படுகின்ற அம்சங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.