உலகின் மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனமான ஃபார் ஷிப்பிங் நிறுவனம் இலங்கையில் பயிற்சி பெற்ற கப்பல் பணியாளர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க இணங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் நேற்று துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவைச் சந்தித்த போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையில் உள்ள கடற்றொழில் பயிற்சி நிறுவனங்களில் பட்டம் பெற்ற இளைஞர்களை தமது நிறுவனத்தில் சேர்த்துக் கொள்ளவும், பின்னர் நிரந்தரமாக தொழிலில் அமர்த்தவும் குறித்த கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.