கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களைச் செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற 148 பாரிய பாதாள உலகக் குற்றவாளிகளைக் கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது. திறந்த மற்றும் பொறுப்புமிக்க அரச துறைசார் கண்காணிப்புக்கான நாடாளுமன்றக் குழுவில் குற்றவியல் மற்றும் பிரதி காவல்துறைமா அதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்தார். சந்தேக நபர்கள் வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில், இலங்கை காவல்துறை விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சர்வதேச காவல்துறையினர் இந்த சிவப்பு அறிவித்தல்களை பிறப்பித்துள்ளதாக பிரதி காவல்துறை அதிபர் தெரிவித்துள்ளார். Read more
		    
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து, இந்தியாவுக்கு படகு மூலம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாகங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது. தமிழகத்துக்கு, 14 பேர் கொண்ட வடபகுதி மீனவர்கள் கடல் வழியாக படகு மூலம் சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக ஆளுநர் ரவி, தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை ஆகியோரை சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளனர். 
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் (மானிப்பாய் தொகுதி) அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவுப் பேருரை தர்மலிங்கம் தந்த கொடை என்னும் தலைப்பில் யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இன்று 04.09.2023 திங்கட்கிழமை காலை 08மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி திரு. சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் அவர்கள் நினைவுப் பேருரையினை நிகழ்த்தினார்.