முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் (மானிப்பாய் தொகுதி) அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவுப் பேருரை தர்மலிங்கம் தந்த கொடை என்னும் தலைப்பில் யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இன்று 04.09.2023 திங்கட்கிழமை காலை 08மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி திரு. சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் அவர்கள் நினைவுப் பேருரையினை நிகழ்த்தினார்.
நிகழ்வில் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் கல்விச் சமூகத்தினரும் கலந்து சிறப்பித்திருந்தனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 