07.09.1987இல் தம்பனையில் மரணித்த தோழர்கள் ராமு (சா.அகிலன் – ஈச்சந்தீவு), தமிழ்ச்செல்வன்( சுழிபுரம்),ஹென்றி ( முருகானந்தம் – பாலையூற்று), வேந்தன்( சுழிபுரம்), டியூக் (ஹரிச்சந்திரன்-கன்னியா), மனோரஞ்சன்(கனகசுந்தரம்), ஞானராஜ் ( பன்குளம்), கரன்( மட்டக்களப்பு), குமார் ( தீவுப்பகுதி), ரகுன் ( யாழ்நகர்), ரஞ்சன் (திருகோணமலை),சோதிராஜ்(மட்டக்களப்பு), ஜீவா (மட்டக்களப்பு) ஆகியோரின் 36ஆம் ஆண்டு நினைவுதாள் இன்று
		    
மலர்வு. – 20.06.1965
யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுமி ஒருவரின் இடது கை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சம்பவத்துடன் தொடர்புடைய தாதிக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்து யாழ். நீதவான் A.A.ஆனந்தராசா உத்தரவு பிறப்பித்துள்ளார். சிறுமியின் பெற்றோரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 
2022 கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை மின்னஞ்சல் ஊடாக அனுப்பிவைக்க முடியுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பற்கான வழிகாட்டல் கையேடு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. 
இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு, மத்திய நீர்வழி போக்குவரத்து அமைச்சு அனுமதி மறுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. தமிழகம் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது. மாநில அரசின் ஒத்துழைப்புடன், மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சு இந்த பணியை நேரடியாக மேற்கொள்ளவுள்ளது. இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறைக்கு இரு வழித்தடங்களில் பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க தமிழக கடல் சார் வாரியம் தீர்மானித்துள்ளது.