இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடாவின் அரசியல் மற்றும் வர்த்தக ஆலோசகர் டானியல் வூட் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் செய்துள்ளார். அவர் இன்று முற்பகல் யாழ்ப்பாணம் பொது நூலகத்தை பார்வையிட்யிட்டுள்ளார். இதன்போது, நூலகத்தின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் நூல்கள் குறித்த தகவல்களையும் கேட்டறிந்துகொண்டதாக குறிப்பிடப்படுகின்றது.