Posted by plotenewseditor on 12 September 2023
						Posted in செய்திகள் 						  
											
					 
					
					
					  
					  					  
					  
					
இன்று (12) நள்ளிரவு முதல் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார். Locomotive operator பொறியியலாளர் சங்கத்தினர்  முன்னெடுத்துள்ள பணிப்பகிஸ்கரிப்பிற்கு பதில் வழங்கும் வகையில்  அமைச்சர் இதனை கூறியுள்ளார். இன்று காலை முதல் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஸ்கரிப்பு  காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான ரயில்கள் சேவையில் ஈடுபட்டமையினால், மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதேவேளை, இன்று காலை ஹொரபே ரயில் நிலையத்தில் அலுவலக ரயிலின் மேற்கூரையில் இருந்து வீழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். Read more