நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என அதன் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.  இதன் காரணமாக பொலிஸாருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.  Read more
		    
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூப ஜனாதிபதி Miguel Díaz-Canel-ஐ சந்தித்துள்ளார். இதன்போது, கியூபாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல உடன்பாடுகள் எட்டப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. G77 சீன அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கியூபா சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அந்நாட்டு ஜனாதிபதி Miguel Díaz-Canel வரவேற்றார். கியூபாவுக்கு எதிரான தடைகளை நீக்குமாறு கோரும் ஐக்கிய நாடுகளின் தீர்மானத்திற்கு இலங்கை அனைத்து சந்தர்ப்பங்களிலும்  ஆதரவளித்து வருவதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.