இலங்கையின் அபிவிருத்திக்காக 19 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதியுதவியை வழங்க தீர்மானித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நிதியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின் போது இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான அபிவிருத்திக்கான உடன்படிக்கையின் பிரகாரம், இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
		    
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நேபாள பிரதமர் Pushpa Kamal Dahal ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி நியூயோர்க் சென்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.