பாராளுமன்ற குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு தற்காலிகத் தடை விதிக்கும் தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் பொருட்களை நாட்டிற்கு கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக பாராளுமன்ற ஒழுக்கக்குழு மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான பிரேரணையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்ததுடன், எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல அதனை வழிமொழிந்தார். Read more
		    
சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு 10,000 ரயில் தண்டவாளங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பிரதான ரயில் மார்க்கத்தில் மஹவ முதல் கொழும்பு வரையிலான வளைவுகளுடன் கூடிய இடங்களில் பொருத்த திட்டமிட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் W.A.D.S.குணசிங்க தெரிவித்தார். குறித்த பகுதிகளில் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படாவிட்டால், ரயில்கள் தடம்புரளும் சம்பவங்கள் பதிவாகுமென அவர் சுட்டிக்காட்டினார்.