Header image alt text

சக்தி மாதர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறு தொழிற்பயிற்சித் தொடக்கவிழா திருகோணமலை பாலையூற்று முருகன்கோயிலடி ரெட் டைமண்ட் விளையாட்டரங்கில் சக்தி மாதர் சங்கத்தின் தலைவி திருமதி வசந்தினி சந்திரன் தலைமையில் இன்று (24.09.2023) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பமாகி மாலை 5.00 மணிவரை நடைபெற்றது. நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் – செல்வன் பிரபாகரன் தயாகரன் ( தி/இ.கி.ச.ஸ்ரீ.கோணேஸ்வரா இந்து கல்லூரி பழைய மாணவர்.
Leo Club of Trincomalee Elite கழகத்தின் துணைதலைவர். தனியார் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர்- o/l maths & science
A/l – bio stream)

Read more

வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் என்பவற்றை உடனடியாக நீக்கிக் கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. இந்த 2 சட்டமூலங்களும் மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சட்டவாக்கத்தை அதிகளவில் பாதிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று(23) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

X-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால இழப்பீட்டுத் தொகை நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.  அதற்கமைய, 878,650.53 அமெரிக்க டொலர் இடைக்கால இழப்பீடாக கிடைக்கப்பெற்றுள்ளது. எஞ்சிய 16 மில்லியன் ரூபா கொடுப்பனவு கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொகையானது கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் செலவுகளுக்காகக் கிடைக்கப்பெற்றுள்ளது. Read more