சக்தி மாதர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறு தொழிற்பயிற்சித் தொடக்கவிழா திருகோணமலை பாலையூற்று முருகன்கோயிலடி ரெட் டைமண்ட் விளையாட்டரங்கில் சக்தி மாதர் சங்கத்தின் தலைவி திருமதி வசந்தினி சந்திரன் தலைமையில் இன்று (24.09.2023) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பமாகி மாலை 5.00 மணிவரை நடைபெற்றது. நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் – செல்வன் பிரபாகரன் தயாகரன் ( தி/இ.கி.ச.ஸ்ரீ.கோணேஸ்வரா இந்து கல்லூரி பழைய மாணவர்.Leo Club of Trincomalee Elite கழகத்தின் துணைதலைவர். தனியார் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர்- o/l maths & science
A/l – bio stream)
நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்
கௌரவ விருந்தினராக கட்சியின் பொருளாளரும், வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான க. சிவநேசன்,
சிறப்பு விருந்தினர்களாக கட்சியின் தேசிய அமைப்பாளர் ஆ.சிறீஸ்கந்தராஜா, நிர்வாகச் செயலாளர் ம.பத்மநாதன், மகளிர் பிரிவு பொறுப்பாளர் கா.சந்திரவதனி, யாழ் மாவட்ட மகளிர் பிரிவு பொறுப்பாளர் திருமதி செல்வி,
இளைஞர் பிரிவு பொறுப்பாளர் ஜூட் பிரசாந்த், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா. கஜதீபன், மூத்த ஊடகவியலாளர் ஆ. ஜதீந்திரா, சட்டத்தரணி செ.கோபிபிரசன்னா, பீலியடி சனசமூக நிலைய தலைவரும் சமூக சேவையாளருமான பா. இந்திரராஜ்,
கட்சியின் முன்னாள் தவிசாளர்கள் க.தவராஜா மாஸ்டர், சு.ஜெகதீஸ்வரன், க.தர்சன், முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிசோர், கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் மதியழகன், திருவருட்செல்வன், மத்தியகுழு உறுப்பினர் சி.ஜேசுதாசன் ஆகியோரும் பங்கேற்றதோடு, கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களும், மாதர் சங்கத்தினரும், பெருமளவு பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
நிகழ்வின்போது விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றன.
தொடர்ந்து தோழர் பார்த்தன் ஞாபகார்த்தமாக தையல் இயந்திரம் உட்பட தொழிற்பயிற்சிக்கான தையல் இயந்திரங்கள், இசைக்கருவி மற்றும் பல்வேறு உதவித் திட்டங்களும், வழங்கிவைக்கப்பட்டன.
இதன்படி 05 தையல் இயந்திரங்கள், அமரர் நல்லதம்பி அம்பிகாபதி அவர்களின் நினைவாக இசைக்கருவி,
ரெட் டயமன்ட் கழகத்திற்கு- விளையாட்டு உபகரணம், வீதி ஒளி விளக்கு,
பல்கலைகழக மாணவர்களுக்கான உதவிதொகை, பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டன.
கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடக கழகத்தின் லண்டன், ஜெர்மன், கனடா கிளைகளின் தோழர்கள், லண்டன் வாழ் திருகோணமலை இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள், துளி அமைப்பு ஆகியோர் அனுசரணை வழங்கியுள்ளனர்.
இதன்போது சிறுவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் மிகச் சிறப்பாக இடம்பெற்றன.
திருமதி வசந்தினி சந்திரன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.
