26.09.2000ல் மரணித்த தோழர் தேவன் (கந்தையா சண்முகராஜா) அவர்களின் 23ம் ஆண்டு நினைவுநாள் இன்று…
Posted by plotenewseditor on 26 September 2023
						Posted in செய்திகள் 						  
26.09.2000ல் மரணித்த தோழர் தேவன் (கந்தையா சண்முகராஜா) அவர்களின் 23ம் ஆண்டு நினைவுநாள் இன்று…
Posted by plotenewseditor on 26 September 2023
						Posted in செய்திகள் 						  
இந்திய – கனடா விவகாரத்தில், இலங்கை இந்தியாவிற்கு ஆதரவளிப்பதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளதாக Hindustan Times செய்தி வௌியிட்டுள்ளது. சீக்கிய செயற்பாட்டாளர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய அரசாங்கம் உள்ளதாக கனடா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா வழங்கியுள்ள பதில் உறுதியானதும் நேரடியானதுமாக உள்ளது  என மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளதாக Hindustan Times-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.  Read more
Posted by plotenewseditor on 26 September 2023
						Posted in செய்திகள் 						  
சீனாவுக்கு சொந்தமான Shi Yan 6 ஆய்வுக் கப்பல் ஒக்டோபர் மாதத்தில் நாட்டின் கடற்பரப்பிற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என வௌியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சர்வதேச செய்தி ஊடகமொன்றுக்கு அமைச்சர் அலி சப்ரியினால் கடந்த திங்கட்கிழமை (25) வழங்கப்பட்ட நேர்காணலை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வௌியிட்டுள்ளன. பாதுகாப்பு தொடர்பான இந்தியாவின் கரிசனை இலங்கைக்கும் முக்கியமானது என வௌியுறவு அமைச்சர் அலி சப்ரி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.  Read more