திருகோணமலை, பாலையூற்று முருகன் கோவிலடி கிராம பெண்களுக்கு சக்தி மாதர் சங்கத்தினால் இலவச தையல் பயிற்சி செயற்றிட்டத்தின் ஆரம்ப கட்டமாக இன்று தையல் பயிற்சி ஆசிரியையினால், முதற் கட்டமாக முப்பது(30) சக்தி மாதர் சங்க உறுப்பினர்களுக்கு பயிற்சி தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் தையல் வகை, நுட்பங்கள் , NVQ4 தரச்சான்றிதழின் பெறுமதி போன்ற முக்கியமான விடயங்கள் மற்றும் பயிற்சி விதிமுறைகள் என்பன விரிவான விளக்கங்களுடன் சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.