தனிப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அல்லது தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் தங்கள் உரிமங்களை புதுப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு இன்று அறிவித்துள்ளது. அதன்படி, துப்பாக்கி உரிமங்களை ஒக்டோபர் 01 முதல் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் புதுப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விபரங்களை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமம் புதுப்பித்தல் நடவடிக்கை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் மேற்கொள்ளப்படாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
		    
ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான 2  விமானப் பயணங்கள் இன்று(28)  தாமதமாகின. அத்துடன், மற்றுமொரு விமானப் பயணத்தை இரத்துச் செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. பங்களாதேஷ் தலைநகரான டாக்கா நோக்கி பயணிக்கவிருந்த UL 189 இலக்க விமானம், தொழில்நுட்ப கோளாறுக்குள்ளானமையினால் பயணத்தை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.